/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாயியை கார்கே அவமதித்தது சரியல்ல மத்திய அமைச்சர் குமாரசாமி கண்டிப்பு
/
விவசாயியை கார்கே அவமதித்தது சரியல்ல மத்திய அமைச்சர் குமாரசாமி கண்டிப்பு
விவசாயியை கார்கே அவமதித்தது சரியல்ல மத்திய அமைச்சர் குமாரசாமி கண்டிப்பு
விவசாயியை கார்கே அவமதித்தது சரியல்ல மத்திய அமைச்சர் குமாரசாமி கண்டிப்பு
ADDED : செப் 09, 2025 05:07 AM

பெங்களூரு: துவரம் பருப்பு பாழாகிவிட்டது என்ற பிரச்னையை கூற வந்த விவசாயியை திட்டி அனுப்பிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே, நேற்று முன் தினம் காலை, தன் கலபுரகி இல்லத்தில் ஊடகத்தினரை சந்தித்தார். அப்போது அங்கு வந்த விவசாயி, தன் 4 ஏக்கரில் பயிரிட்ட துவரை பாழாகிவிட்டது என்று கூறினார். தன்னுடன் கொண்டு வந்த, துவரை செடியை காண்பித்தார்.
விவசாயிக்கு ஆறுதல் கூறுவதற்கு பதிலாக, மல்லிகார்ஜுன கார்கே, கோபத்தை காட்டினார். 'உன் 4 ஏக்கர் நிலத்தில் பாழான துவரையை காட்ட வந்தாயா? என் 40 ஏக்கர் நிலத்தில் விளைச்சல் பாழானது' என காரசாமாக திட்டினார்.
இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. பலரும் இவரை கண்டித்தனர்.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று மத்திய அமைச்சர் குமாரசாமி வெளியிட்ட பதிவு:
விவசாயியிடம் மல்லிகார்ஜுன கார்கே நடந்து கொண்ட விதத்தை கண்டு, நான் வருத்தம் அடைந்தேன். இவரை போன்ற மூத்த தலைவரிடம், இப்படிப்பட்ட செயலை, நான் எதிர்பார்க்கவில்லை.
கஷ்டத்தில் உள்ள விவசாயி, கஷ்டத்தை கூற வந்தபோது, அவருக்கு ஆறுதல் கூறாமல், மிரட்டி அனுப்பியது சரியல்ல. கஷ்டத்தை நம்மிடம் கூறாமல், மக்கள் வேறு யாரிடம் கூறுவர்? ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் தேசிய தலைவர் என்பதை மறந்து பேசியுள்ளார். இது அவரது தகுதிக்கு அழகல்ல.
விவசாயியிடம் கார்கே, அப்படி பேச வேண்டிய அவசியமே இல்லை. இவர் துவரை விவசாயியாக இருக்கலாம். ஆனால் 40 ஏக்கரில் விளைவிக்கும் கார்கேவும், 4 ஏக்கரில் விளைவிக்கும் ஏழை விவசாயியும் ஒன்றா? நஷ்டத்தை சமாளிக்கும் சக்தி, கார்கேவுக்கு இருக்கலாம். ஏழை விவசாயிக்கு இருக்குமா?
விவசாயியை கார்கே அவமதித்துள்ளார். இது தாயை அவமதித்தது போன்றாகும். குறைந்தபட்சம் அந்த நபரின் கண்ணீரை துடைத்து, ஆறுதல் கூறியிருக்கலாம். இது காங்கிரசின் அகங்காரத்துக்கு சாட்சி.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.