/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் ரோஹிங்கியா அகதிகள் மத்திய அமைச்சர் ஷோபா 'பகீர்' தகவல்
/
பெங்களூரில் ரோஹிங்கியா அகதிகள் மத்திய அமைச்சர் ஷோபா 'பகீர்' தகவல்
பெங்களூரில் ரோஹிங்கியா அகதிகள் மத்திய அமைச்சர் ஷோபா 'பகீர்' தகவல்
பெங்களூரில் ரோஹிங்கியா அகதிகள் மத்திய அமைச்சர் ஷோபா 'பகீர்' தகவல்
ADDED : ஜூலை 19, 2025 10:58 PM

பெங்களூரு: ''ரோஹிங்கியா அகதிகள், பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கின்றனர்,'' என, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா 'பகீர்' தகவல் கூறி உள்ளார்.
பெங்களூரின் எதிர்கால வளர்ச்சி மற்றும் சீரான போக்குவரத்து அமைப்பை கருத்தில் கொண்டு, ஹெப்பால் பகுதியில் பல அடுக்கு வடிவமைப்பு கொண்ட மையம் கட்ட, அரசு 9 ஏக்கர் நிலத்தை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்த இடத்தை மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஹெப்பாலில் பல அடுக்கு வடிவமைப்பு கொண்ட மையம் கட்ட, மெட்ரோ நிர்வாகத்திற்கு 45 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் வெறும் 9 ஏக்கர் நிலம் மட்டுமே இப்போது கொடுத்துள்ளனர். மீதம் உள்ள நிலத்தை விற்க அரசு முயற்சிக்கிறது. யாரிடமிருந்து சூட்கேஸ் வாங்கி உள்ளனர் என்று தெரியவில்லை.
எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது, 2004ல் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது வரை நிலத்தை கையகப்படுத்தவில்லை. குப்பை, பழைய பொருட்கள் போடும் இடமாக மாறி உள்ளது.
ஹெப்பாலில் உள்ள பி.எம்.டி.சி., பணிமனையை மேம்படுத்த வேண்டும். ஹெப்பால் வழியாக விமான நிலையத்திற்கு, தினமும் 5,000 வாகனங்கள் செல்கின்றன. இதனால் ஹெப்பாலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புறநகர், வட்ட ரயில் திட்டப் பணிகளுக்கு நிலம் தேவைப்படுகிறது.
ரோஹிங்கியா அகதிகள், தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் என்.ஐ.ஏ., விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், நிலம் அருகே, கூடாரம் அமைத்து வசிக்கும், வெளி மாநிலத்தினரின் ஆதார் அட்டைகளை வாங்கி, ஷோபா சரிபார்த்தார்.

