/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சல்லகட்டா ரயில்வே சுரங்கப்பாதை மத்திய அமைச்சர் சோமண்ணா திறப்பு
/
சல்லகட்டா ரயில்வே சுரங்கப்பாதை மத்திய அமைச்சர் சோமண்ணா திறப்பு
சல்லகட்டா ரயில்வே சுரங்கப்பாதை மத்திய அமைச்சர் சோமண்ணா திறப்பு
சல்லகட்டா ரயில்வே சுரங்கப்பாதை மத்திய அமைச்சர் சோமண்ணா திறப்பு
ADDED : ஜூலை 14, 2025 05:30 AM

பெங்களூரு : கெங்கேரி - ஹெஜ்ஜாலா இடையே சல்லகட்டாவில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதையை, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா துவக்கி வைத்தார்.
பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் உள்ள கெங்கேரி - ஹெஜ்ஜாலா இடையே சல்லகட்டாவில் ரயில்வே சுரங்கப்பாதையை, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, நேற்று திறந்து வைத்தார்.
அதுபோன்று, ராமோஹள்ளியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
சல்லகட்டாவில் அவர் பேசியதாவது:
கர்நாடகாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 640 ரயில்வே சுரங்கப்பாலம், ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள சல்லகட்டா ரயில்வே சுரங்கப்பாதையும், ராமோஹள்ளியில் கட்டப்பட உள்ள சுரங்கப்பாதையால், லெவல் கிராசிங்கில் ஏற்படும் தாமதங்களை குறைப்பதுடன், மைசூரு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
பெங்களூரை சுற்றி, 100 கி.மீ., சுற்றுப்பகுதியில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் லெவல் கிராசிங்குகள் அகற்றப்படும். கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையம், உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றப்படும்.
இங்கு கூடுதலாக இரண்டு 'நடைமேடை' கட்டப்படும். பையப்பனஹள்ளி - ஓசூர் வழித்தடம், இரட்டை வழித்தடமாக மாற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
உடன், மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா, எம்.எல்.சி., ஜெயராயி கவுடா, ரயில்வே பெங்களூரு கூடுதல் டிவிஷனல் நிர்வாகி அசுதோஷ் மத்துார், முதன்மை டிவிஷனல் இன்ஜினியர் ராஜிவ் சர்மா உட்பட பலர் இருந்தனர்.