தேவையற்ற பேச்சுகள், வதந்தி: நடிகை கிருஷி தபந்தா உருக்கம்
தேவையற்ற பேச்சுகள், வதந்தி: நடிகை கிருஷி தபந்தா உருக்கம்
ADDED : ஜூன் 30, 2026 04:51 AM

பெங்களூரு: 'என் இதயத்திற்கு நெருக்கமானவரை இழந்து விட்டேன்' என்று, தற்கொலை செய்த நண்பர் வைஷாக் குறித்து நடிகை கிருஷி தபந்தா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரபல கன்னட நடிகை கிருஷி தபந்தா, 34. இவர், ஆர்.ஆர்.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்தார். கடந்த 24ம் தேதி கிருஷியின் வீட்டில் அவரது நண்பர் வைஷாக், 42 துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷிக்கும், வைஷாக்கிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் தான் வைஷாக் தற்கொலை செய்தார் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டனர்.
இதுகுறித்து, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் கிருஷி தபந்தா நேற்று வெளியிட்ட பதிவு:
நான் இப்படி ஒரு விளக்கத்தை அளிக்க நேரிடும் என்று, நினைத்து கூட பார்த்தது இல்லை.
என்னை சுற்றும் யூகங்கள், கேள்விகள் காரணமாக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்த, ஒருவரை இழந்த வேதனையில் உள்ளேன். இதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியவில்லை. வைஷாக்கின் இழப்பை ஏற்று கொள்ள அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் போராடி கொண்டு இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் கட்டு கதைகள் உருவாக்கப்படுகின்றன. வைஷாக் மரணம் குறித்து தேவையற்ற விவாதங்களை நிறுத்தும்படி அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன். தேவையற்ற பேச்சுகள், யூகம், வதந்தி ஆகியவை துயரத்தில் இருப்பவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைக்கு தனிப்பட்ட முறையில் பதில் அளிக்கும் சக்தி என்னிடம் இல்லை. தயவு செய்து அனைவரும் கண்ணியம், இரக்கத்தை காட்டுங்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
