/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிருஷ்ணதேவராயர் சமாதியில் இறைச்சி வெட்டியதால் சலசலப்பு
/
கிருஷ்ணதேவராயர் சமாதியில் இறைச்சி வெட்டியதால் சலசலப்பு
கிருஷ்ணதேவராயர் சமாதியில் இறைச்சி வெட்டியதால் சலசலப்பு
கிருஷ்ணதேவராயர் சமாதியில் இறைச்சி வெட்டியதால் சலசலப்பு
ADDED : ஏப் 22, 2025 05:07 AM

கொப்பால்: கொப்பால் மாவட்டம், கங்காவதியின் ஆனேகுந்தி அருகில் உள்ள துங்கபத்ரா ஆற்றின் அருகில், 64 கால் மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் சமாதி உள்ளது.
இந்த மண்டபத்தில் ஒருவர், ஆட்டிறைச்சியை வெட்டும் வீடியோ, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பரவியது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதற்கு பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், தன் 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
இந்திய வரலாற்றில் சிறந்த ராஜாவாக அறியப்பட்டவர் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர். அவரின் சமாதியில் ஆட்டு இறைச்சி வெட்டுவது கண்டனத்துக்குரியது.
கிருஷ்ணதேவராயரின் சமாதிக்கு பாதுகாப்பு அளிக்காதது வெட்கக்கேடானது.
இது கன்னடர்களுக்கு மட்டுமல்ல, தேசத்துக்கும் அவமானம். இறைச்சி விற்பதன் மூலம், இந்த இடத்தின் புனிதத்தை அழிப்பவர்களை, அப்பகுதியை விட்டு வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இங்குள்ள சமாதியை பராமரிக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.