தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உருது பள்ளிகள் நேரம் மாற்றம்: ஹிந்து அமைப்பினர் கண்டனம்

 உருது பள்ளிகள் நேரம் மாற்றம்: ஹிந்து அமைப்பினர் கண்டனம்

 உருது பள்ளிகள் நேரம் மாற்றம்: ஹிந்து அமைப்பினர் கண்டனம்


ADDED : பிப் 04, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ரம்ஜான் பண்டிகையை யொட்டி உருது பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் உருது மொழி துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது, பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து, மார்ச் 20 வரை, உருது மொழி பள்ளிகள், காலை 8:00 மணி முதல் பகல் 12:45 மணி வரை மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல, ஹிந்து பண்டிகைக்கு பள்ளிகள் நேரம் மாற்றியமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.

மேலும், காங்கிரஸ், சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பிற ஹிந்து அமைப்புகளும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து உள்ளனர். பள்ளி மாணவர்களிடம் பாரபட்சம் காட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

இது குறித்து, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. , பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியதாவது:

ரம்ஜான், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என்பவை மதங்கள் சம்பந்தப்பட்ட பண்டிகை எனவும், மதங்களின் அடிப்படையிலே மாணவர்களுக்கு விடுமுறை சலுகைகள் வழங்கப்படும் என மாணவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை காங்கிரஸ் விதைக்கிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருப்திபடுத்தும் அரசியலை செய்கிறது. சமத்துவம் என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாத வகையில் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us