சட்டவிரோத 'ஹோம் ஸ்டே'க்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சட்டவிரோத 'ஹோம் ஸ்டே'க்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 28, 2026 04:14 AM
குடகு: குடகு மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஹோம்ஸ்டேக்கள் உள்ளன. இத்தகைய ஹோம்ஸ்டேக்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, குடகு மாவட்ட ஹோம்ஸ்டே அசோசியேஷன் தலைவர் மொந்தி கணேஷ் கூறியதாவது:
குடகு மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஹோம்ஸ்டேக்கள் செயல்படுகின்றன. இவற்றில் தங்கும் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சரியான வழிகாட்டுதல் இல்லை. இது சட்டவிரோத செயல்களுக்கு காரணமாகிறது.
இம்மாவட்டம் ஆயிரக்கணக்கான ஹோம்ஸ்டேக்கள், ரிசார்ட்டுகள் உள்ள சுற்றுலா தலமாகும். ஆனால் சுற்றுலா துறையில் துணை இயக்குநர் பணியிடம், பல மாதங்களாக காலியாக உள்ளது. நடவடிக்கை எடுப்பதில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக 2,470 ஹோம்ஸ்டேக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2,000க்கும் மேற்பட்ட ஹோம்ஸ்டேக்கள் பதிவு செய்து கொள்ளாமல், சட்டவிரோதமாக இயங்குகின்றன.
இவைகளில் சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.
சமீபத்தில் வில்லா ஹோம்ஸ்டேவில் வெளிநாட்டு பெண்ணொருவர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
குடகு மாவட்டத்தில், அதிகரித்து வரும் ஹோம்ஸ்டேக்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை, உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
