/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை தடுப்பு சுவரில் மோதி இரண்டாக உடைந்த வேன்
/
சாலை தடுப்பு சுவரில் மோதி இரண்டாக உடைந்த வேன்
ADDED : ஜூலை 07, 2025 07:15 AM

ஞானபாரதி : 'நைஸ்' சாலையில் தடுப்பு சுவரில் மோதிய வேன் இரண்டாக உடைந்தது. டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரு பேடரஹள்ளியில் இருந்து கெங்கேரிக்கு படுக்கை விரிப்புகள், பஞ்சு ஏற்றி கொண்டு, டெம்போ வேன் நேற்று மதியம் 1:00 மணியளவில் சென்றது. டிரைவர் ராகவேந்திரா ஓட்டினார். அவருடன் தொழிலாளிகள் சலீம், பயாஸ் சென்றனர். நைஸ் சாலையில் ஞானபாரதி ராமசந்திரா பாலம் பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, டெம்போ வேன் தறிகெட்டு ஓடியது. சாலை தடுப்பு சுவரில் மோதியது.
மோதிய வேகத்தில் டெம்போ வேன் இரண்டு துண்டாக உடைந்தது. டிரைவர் இருக்கை பகுதி கீழே விழுந்தது. டிரைவர் உட்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தடுப்பு சுவரில் டெம்போ வேன் மோதிய காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.