தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'வந்தே மாதரம்' பாடல்: முதல்வர் புது முடிவு

 'வந்தே மாதரம்' பாடல்: முதல்வர் புது முடிவு

 'வந்தே மாதரம்' பாடல்: முதல்வர் புது முடிவு


ADDED : செப் 11, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடக அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாட வேண்டும்,'' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் பாடலின் முழுமையான, ஆறு பத்திகளையும் பாட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

கடந்த 1937ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், கர்நாடகாவில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் இரண்டு பத்திகளை மட்டுமே பாட முடியும் என, முதல்வர் சிவகுமார், கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாட வேண்டும் என்று அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆனால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us