sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடுக்குமாடி குடியிருப்புகளால் வாகன சார்ஜிங் பாயின்ட் கட்டாயம்

 அடுக்குமாடி குடியிருப்புகளால் வாகன சார்ஜிங் பாயின்ட் கட்டாயம்

 அடுக்குமாடி குடியிருப்புகளால் வாகன சார்ஜிங் பாயின்ட் கட்டாயம்


ADDED : மார் 28, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுப்பணி  சென்ட்ரல் மாநகராட்சியில், 2026 - 2027ம் நிதியாண்டில் வளர்ச்சி பணிகள் செய்ய, மத்திய அரசின், 16வது நிதி குழுவிடம் இருந்து 112.25 கோடி ரூபாயும், மாநில நிதி குழுவிடம் இருந்து 90.97 கோடி ரூபாயும் எதிர்பார்க்கிறோம். முதல்வரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாயும், சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்தின் மூலம் 375.61 கோடி ரூபாயும் பெறுவோம்.

 மாநகராட்சியில், 265 கி.மீ., நீளத்திற்கு முக்கிய சாலைகளும், 1,346 கி.மீ., துாரத்திற்கு வார்டு சாலைகளும் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் நிதி மூலம் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

 பொதுப்பணிகளை செய்ய 1,760 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட 200 கோடி ரூபாயும் அடங்கும்.

 சாம்ராஜ்பேட், காந்திநகர், சிவாஜிநகர் தொகுதிகளில் முக்கிய பணிகளுக்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 முதல்வரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெற்ற, 200 கோடி ரூபாயில், 115 கி.மீ., நீள வார்டு சாலைகள் தார் சாலையாக மாற்றப்படும். பத்து புதிய சமுதாய கூடங்கள் கட்டப்படும்.

 வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், சென்ட்ரல் மாநகராட்சியின், 10.96 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தில், மழைநீர் வடிகால்களை உலக தரத்திற்கு உயர்த்தும் திட்டம் உள்ளது.

 மாநகராட்சியின் வார்டுகள் வளர்ச்சிக்காக, 141.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் தலா 2.25 கோடி ரூபாய் கிடைக்கும். சாலை பள்ளங்களை மூடவும், சாக்கடை கால்வாய் வண்டல் மண்ணை அகற்றவும் ஒரு வார்டுக்கு, 75 லட்சம் ரூபாய் வீதம் 47.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

 பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஒவ்வொரு அடியிலும் பாதுகாப்பு என்ற பெயரில் புதிய திட்டம் துவக்கம். மாநகராட்சிக்கு உட்பட்ட 12 முக்கிய சந்திப்புகள் தரம் உயர்த்தப்படும்.

 பொது - தனியார் பங்களிப்பில் புதிதாக ஒன்பது நடை மேம்பாலம் கட்டப்படும்.

 இந்த ஆண்டு இறுதிக்குள் 30 கி.மீ., துார சாலையில் ஒயிட் டாப்பிங் பணிகள் நிறைவு பெறும்.

 காந்திநகரில் குண்டுராவ் பெயரில் விளையாட்டு மைதானம், மழலையர் பள்ளி, உடற்பயிற்சி கூடம் கட்டப்படும். சேஷாத்ரிபுரம் நீச்சல் குளம் மேம்படுத்தப்படும்.

 சாம்ராஜ்பேட் ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலை பள்ளியில், இரண்டாம் கட்ட மேம்பாட்டு பணிகள் துவங்கப்படும். டயாசிலிஸ் மையம், சமுதாய கூடம் கட்டப்படும். சித்தையா சாலையில் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்படும். ஜெயநகர் 2 வது பிளாக்கில் கனக நாயக் பவன், சின்னயனபாளையாவில் புதிய சந்தை கட்டப்படும்.

 அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் பாயின்ட் நிறுவுவது கட்டாயமயமாக்கப்படும்.

 மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 67,500 தெரு விளக்குகள், எல்.இ.டி,. விளக்குகளாக மாற்றப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us