/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாகனங்கள் அதிவேகம் ரூ.2.30 லட்சம் அபராதம்
/
வாகனங்கள் அதிவேகம் ரூ.2.30 லட்சம் அபராதம்
ADDED : பிப் 04, 2025 06:36 AM
பெங்களூரு: பெங்களூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 228 பேரிடமிருந்து 2.30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் மது அருந்திவிட்டு வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை உபயோகப்படுத்துவது, மின்னல் வேகத்தில் பைக்கில் செல்வது என பொது மக்களை சிலர் பயமுறுத்தி வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, நகரின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் பலர் பிடிபட்டனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
இதன்படி, ஜன., 27 முதல் பிப்., 2 வரை நகரின் 50 போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடந்தது.
இதில், 62,300 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற 228 பேரிடம் இருந்து 2.30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

