/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தை விற்பனை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
/
குழந்தை விற்பனை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
குழந்தை விற்பனை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
குழந்தை விற்பனை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
ADDED : ஜூன் 27, 2025 11:14 PM
பெங்களூரு: குழந்தை விற்பனை வழக்கில், மூவர் மீதான குற்றச்சாட்டு 12 ஆண்டுகளுக்கு பின் உறுதியானது. 30ம் தேதி, தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
தட்சிண கன்னட மாவட்டம், உல்லாலில், 2013ல் குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அங்கன்வாடி ஊழியர் பாத்திமா என்பவர், வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது லெனட் வேகஸ் என்ற பெண், வேறு ஒருவரின் குழந்தையை பணம் கொடுத்து வாங்கியது தெரிய வந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நலன் கமிட்டியிடம், அங்கன்வாடி ஊழியர் தகவல் கூறினார். கமிட்டி நிர்வாகிகள், லெனட் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, முதலில் குழந்தை தன்னுடையதே என, பிடிவாதம் பிடித்தார்.
குழந்தை தனக்கு பிறந்தது என்பதற்கான ஆவணங்களையும் காட்டினார். மங்களூரின் நர்சிங் ஹோம் ஒன்றில் குழந்தை பிரசவித்ததற்கான ஆவணங்கள் இருந்தன.
அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, குழந்தையின் உண்மையான தாயை கண்டுபிடித்தனர். அந்த குழந்தை, வட மாவட்டத்தை சேர்ந்த சென்னம்மா என்பவருக்கு பிறந்தது.
கட்டட பணிக்கு வந்திருந்த சென்னம்மா, வறுமை காரணமாக தன் குழந்தையை 20,000 ரூபாய்க்கு, லெனட்டுக்கு விற்றது தெரிந்தது.
அதன்பின் அதிகாரிகள், அன்றைய போலீஸ் கமிஷனருக்கு, குழந்தை விற்பனை குறித்து தகவல் தெரிவித்தனர். போலீஸ் கமிஷனரின் உத்தரவுபடி விசாரணை நடத்தப்பட்டது.
லெனட் மற்றவரின் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளி மாநிலத்தினர் அல்லது வெளி நாட்டினருக்கு விற்று வந்தது தெரிய வந்தது.
அவரை வலையில் விழ வைக்கும் நோக்கில், போலீசாரே துபாயில் உள்ள தம்பதிக்கு குழந்தை வேண்டும் என, லெனட்டை நம்ப வைத்தனர்.
அவரும் குழந்தையை விற்க வந்தபோது, கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லெனட் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜோஸ்ஸி, லஸ்ஸி ஆகியோர் மீது வழக்குப் பதிவானது. விசாரணையை முடித்த போலீசார், மங்களூரின் முதன்மை மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதாக, நீதிமன்றம் நேற்று அறிவித்தது. ஜூன் 30ம் தேதி, தண்டனை அறிவிப்பதாக கூறியது.