/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.எஸ்.சி.ஏ., தேர்தல் எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
/
கே.எஸ்.சி.ஏ., தேர்தல் எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
கே.எஸ்.சி.ஏ., தேர்தல் எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
கே.எஸ்.சி.ஏ., தேர்தல் எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : நவ 28, 2025 05:51 AM
பெங்களூரு: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டி யிட்ட சாந்தகுமார் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ஒத்தி வைத்தார்.
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தலைவர், உறுப்பினர் பதவிக்கான தேர்தல் டிச., 7 ல் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையில் ஒரு அணியினரும், சாந்தகுமார் தலைமையில் மற்றொரு அணியினரும் மனு தாக்கல் செய்தனர். நவ., 25 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், சாந்த குமார், 200 ரூபாய் சந்தா செலுத்தாததால், அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சாந்தகுமார் மனு தாக்கல் செய்தார். இம்மனு நேற்று நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர், 'இம்மனு மீதான தீர்ப்பு அளிக்கும் வரை, தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரின் பட்டியலை வெளியிடக்கூடாது' என்று கூறி ஒத்திவைத்தார்.

