/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூத்த நடிகர் 'பேங்க்' ஜனார்த்தன் காலமானார்
/
மூத்த நடிகர் 'பேங்க்' ஜனார்த்தன் காலமானார்
ADDED : ஏப் 15, 2025 06:54 AM

பெங்களூரு: கன்னடத்தில் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் பேங்க் ஜனார்த்தன், 75, காலமானார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ஜனார்த்தன், நாடகங்களில் நடித்து திரையுலகில் நுழைந்தவர். வங்கியில் பணியாற்றியபடி படங்களில் நடித்ததால், இவருக்கு 'பேங்க் ஜனார்த்தன்' என, பெயர் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால், வங்கி பணியில் முழுமையாக ஈடுபாடு காண்பித்து பதவி உயர்வு பெற்றார்.
காசிநாத் இயக்கி நடித்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம், சூப்பர் ஹிட்டானதால் அடுத்தடுத்த படங்களில் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில், 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஸ்டார் நடிகர்களுடன் நடித்தவர். ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும், தொடர்களும் சூப்பர் ஹிட்டாகின.
வயது முதிர்வு காரணமாக, உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட அவர், நேற்று அதிகாலையில் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.