/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கால்நடை மருத்துவர் முறைகேடு வழக்கு கே.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் கைது
கால்நடை மருத்துவர் முறைகேடு வழக்கு கே.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் கைது
கால்நடை மருத்துவர் முறைகேடு வழக்கு கே.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் கைது
UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 11:22 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: கால்நடை மருத்துவர் முறைகேடு வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், தேர்வர்களிடம் இருந்து வசூலித்த பணத்தில், 1.48 கோடி ரூபாய் கீதாவுக்கு கிடைத்தது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், கடந்த 12ம் தேதி கீதாவுக்கு, ஜாமின் கிடைத்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த முறைகேடு வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. எஸ்.ஐ.டி., கைதில் இருந்து தப்பிக்க கடந்த 10ம் தேதி கீதாவின் வக்கீல் முன்ஜாமின் கேட்டு மனு செய்திருந்தார்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்த போது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னாள் உறுப்பினர் கீதாவை நேற்றிரவு எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கைது செய்தனர்.
