/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடங்காத 'வீலிங்' மோகம் பரவும் வீடியோ
/
அடங்காத 'வீலிங்' மோகம் பரவும் வீடியோ
ADDED : ஜூலை 13, 2025 05:09 AM
தங்கவயல்: பெங்களூரு- - சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்ற 4 பேரின் 'வீலிங்' சாகசம், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீசார் விளம்பர போர்டுகளும் வைத்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தி உள்ளனர்.
சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் சில இளைஞர்கள், சிறுவர்கள் அலட்சியமாக இரு சக்கர வாகனத்தில் வீலிங் சாகசங்கள் செய்து வருகின்றனர்.
'தங்கவயல் பெமல் நகர் -- பேத்தமங்களா சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் இரு மோட்டார் பைக்கில் நான்கு பேர் அதிவேகமாக வீலிங் செய்கின்றனர். ஒரு இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர், நீளமான அரிவாளை பிடித்து செல்கிறார்.
இந்த காட்சியை பெங்களூருக்கு காரில் சென்றவர், வீடியோ படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது பரவி வருகிறது.