தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மேகதாது திட்டம் விஜய்க்கு புரியவில்லை கர்நாடக முதல்வர் சிவகுமார் கிண்டல்

மேகதாது திட்டம் விஜய்க்கு புரியவில்லை கர்நாடக முதல்வர் சிவகுமார் கிண்டல்

மேகதாது திட்டம் விஜய்க்கு புரியவில்லை கர்நாடக முதல்வர் சிவகுமார் கிண்டல்

6


UPDATED : நவ 09, 2026 08:07 PM

ADDED : நவ 08, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 08:07 PM ADDED : நவ 08, 2026 07:13 PM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: ''மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்கு தான் அதிக பலன் கிடைக்கும். தமிழக முதல்வர் விஜய்க்கு அது புரியவில்லை,'' என, கர்நாடக முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.

'அண்டை மாநிலங்கள் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க கூடாது' என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக காங்., அரசின் முதல்வர் சிவகுமார் ஹாசனில் நேற்று அளித்த பேட்டி:

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய், அவரது மாநிலத்திற்காக பேசுகிறார்; இதில் தவறு இல்லை. ஆனால், மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கு தான் அதிக பலன் என்பதை, விஜயும், தமிழகத்தினரும் புரிந்து கொள்ளவில்லை.

அணையில் இருந்து பெங்களூருக்கு தேவையான குடிநீரை எங்களால் எடுக்க முடியும். இதுதவிர 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதை தவிர எங்களால் எதுவும் செய்ய முடியாது.

அணை கட்டினால் 13,350 ஏக்கர் வன நிலங்கள் மூழ்கும். இதற்கு மாற்று இடத்தை நாங்கள் கொடுக்க வேண்டும். அணை அமைய உள்ள இடம் எனது கனகபுரா தொகுதியில் வருகிறது.

அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி எங்களுக்கு தேவை இல்லை. அவர்கள் ஆதரவு தான் தேவை. மத்திய அரசின் அனுமதியை விட, உச்ச நீதிமன்றமே அணை கட்ட அனுமதி அளித்துள்ளது.

இன்னும் சுற்றுச்சூழல் துறையில் இருந்து அனுமதி கிடைக்க வேண்டும். அணை கட்டியே தீர வேண்டும் என்பதில், கர்நாடகாவின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.

நானும் நேரம் கிடைக்கும் போது பிரதமரை சந்தித்து பேசுவேன். மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

அணையை எங்கள் நிலத்தில் கட்டுகிறோம். தமிழக நிலத்தில் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 177 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us