/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவாஜிநகரில் இன்று விஜயதசமி அணிவகுப்பு
/
சிவாஜிநகரில் இன்று விஜயதசமி அணிவகுப்பு
ADDED : அக் 11, 2025 11:03 PM
சிவாஜிநகர்: ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விஜயதசமி அணிவகுப்பு, பெங்களூரு சிவாஜிநகரில் இன்று நடக்கிறது.
பெங்களூரு சிவாஜிநகர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை ஒட்டி, விஜயதசமி அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான அணிவகுப்பு இன்று நடக்கிறது.
காலை 8:45 மணிக்கு நாகம்மா கோவில் சதுக்கத்தில் இருந்து புறப்படும் அணிவகுப்பு வீரபிள்ளை தெரு, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, தர்மராஜா கோவில் தெரு, குவார்ட்டன்ட் சதுக்கம், தொப்ப முதலியார் தெரு, ஆம்ஸ்ட்ராங்க் ரோடு, கிளர்க்ஸ்பெட் பி ரோடு, காமராஜர் சாலை, சிவன்ஷெட்டி கார்டன் சாலை வழியாக சென்று, நாகம்மா கோவில் சதுக்கத்தில் முடிவடைகிறது.
அணிவகுப்பில் கலந்து கொள்வோர், அணிவகுப்பு துவங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பே வர வேண்டும்.