/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேர்தல் கமிஷன் மீது ராகுல் புகார் விஜயேந்திரா கடும் கண்டனம்
/
தேர்தல் கமிஷன் மீது ராகுல் புகார் விஜயேந்திரா கடும் கண்டனம்
தேர்தல் கமிஷன் மீது ராகுல் புகார் விஜயேந்திரா கடும் கண்டனம்
தேர்தல் கமிஷன் மீது ராகுல் புகார் விஜயேந்திரா கடும் கண்டனம்
ADDED : ஏப் 23, 2025 05:43 AM
கதக் : “தேர்தல் ஆணையம் குறித்து அமெரிக்காவில் ராகுல் இழிவாக பேசியது, அவரது அறியாமையை காட்டுகிறது,” என, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா காட்டமாக கூறினார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடு நடந்து உள்ளது. ஆணையத்திடம் ஓட்டுச்சாவடிகளின் வீடியோ பதிவுகள் கேட்டோம். ஆனால் ஆணையம் மறுத்துவிட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தில் மிகப்பெரிய தவறு உள்ளதை சுட்டிக்காட்டுகிறது' என்று கூறியிருந்தார்.
ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று கதக்கில் கூறியதாவது:
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல், தேர்தல் ஆணையம் குறித்து இழிவாக பேசி, தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்லும்போது, தாய்நாடு குறித்து எப்படி பேச வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கொஞ்சமாவது நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் அநீதி இழைத்து விட்டதாக கூறுகிறார். அப்போது, தெலங்கானா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் காங்., வெற்றி பெற்றது குறித்து அவர் ஏன் பேசவில்லை?
தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடையும்போது மட்டும், தேர்தல் ஆணையம் குறித்து குறை கூறுவதும், அதுவும் அமெரிக்காவிற்கு சென்று குறை கூறியது முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.