சுற்றித்திரியும் புலிக்குட்டிகள் வீடியோவால் கிராமத்தினர் அச்சம்
சுற்றித்திரியும் புலிக்குட்டிகள் வீடியோவால் கிராமத்தினர் அச்சம்
UPDATED : நவ 06, 2026 07:18 PM
ADDED : நவ 05, 2026 09:34 PM
மைசூரு: நான்கு புலிக்குட்டிகள் சுற்றித்திரியும் ‘ட்ரோன்’ வீடியோ வெளியானதால், கிராமத்தினர் அச்சம் அடைந்து உள்ளனர்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவின் அகலா கிராமத்தில், சில நாட்களாக புலி நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், விவசாயி பரமேஸ் என்பவரை புலி தாக்கியது.
இதனால், புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தின் பல பகுதிகளில் கூண்டு வைக்கப்பட்டது. ட்ரோன் மூலமும் புலியை தேடும் பணி தொடர்கிறது.
நேற்று முன்தினம் இரவு, ட்ரோன் மூலம் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, நான்கு புலிக்குட்டிகள், கிராமத்தின் மையப்பகுதியில் நடந்து செல்வது தெரிந்தது.
இந்த ட்ரோன் வீடியோ நேற்று வெளியானது. இதனால், கிராமத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர். தாய் புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும், விரைவில் புலி பிடிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
