மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கணும் அம்மனிடம் பக்தர் வேண்டுதல்
மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கணும் அம்மனிடம் பக்தர் வேண்டுதல்
UPDATED : நவ 06, 2026 07:18 PM
ADDED : நவ 06, 2026 12:14 AM
பெலகாவி: பக்தர்கள் தங்களின் கஷ்டங்களை கூறி, நிவர்த்தி செய்யும்படி வேண்டி, கோவில் உண்டியலில் கடிதம் எழுதி போடுவது வழக்கம். ஆனால் பக்தர் ஒருவர், விசித்திரமான கோரிக்கையை வைத்துள்ளார்.
பெலகாவி மாவட்டம், சவதத்தியில் உள்ள ரேணுகா எல்லம்மா கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் உண்டியலை திறந்து, எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் முடிந்தன.
அப்போது, 2.34 கோடி ரூபாய் ரொக்கம், 26.95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள், 7.32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வந்திருந்தன.
ஒரு பக்தர் கடிதத்தில், ‘நாங்கள் மூட்டைப்பூச்சி பிரச்னையால், வெறுப்படைந்துள்ளோம். மூட்டைப்பூச்சிகளை ஒழித்து, எங்களுக்கு நிம்மதியை அளிக்க வேண்டும். அப்படி செய்தால், கோவிலுக்கு வந்து தேங்காய் உடைத்து, பிரார்த்தனையை நிறைவேற்றுகிறேன்’ என, எழுதப்பட்டு இருந்தது.
இதை பார்த்து, கோவில் ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
