தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கைதிகள் சொகுசு வாழ்க்கை வீடியோ வழக்கு நடிகர் தன்வீரை கைது செய்ய சி.சி.பி., தீவிரம்

கைதிகள் சொகுசு வாழ்க்கை வீடியோ வழக்கு நடிகர் தன்வீரை கைது செய்ய சி.சி.பி., தீவிரம்

கைதிகள் சொகுசு வாழ்க்கை வீடியோ வழக்கு நடிகர் தன்வீரை கைது செய்ய சி.சி.பி., தீவிரம்


UPDATED : நவ 06, 2026 07:18 PM

ADDED : நவ 05, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:18 PM ADDED : நவ 05, 2026 09:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோவை, சமூக வலைத்தளங்களில் பரவவிட்டது நடிகர் தன்வீர்கவுடா தான் என்பது உறுதியாகி உள்ளது. அவரை கைது செய்ய சி.சி.பி., போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பயங்கரவாதி ஷகீல் மன்னா, பலாத்கார வழக்கு குற்றவாளி உமேஷ் ஷெட்டி உள்ளிட்ட கைதிகள், மொபைல் பயன்படுத்தும் வீடியோக்களும், பல கைதிகள் சிறைக்குள் மது விருந்தில் ஈடுபட்டு, சொகுசாக வாழும் வீடியோக்களும், கடந்த ஆண்டு நவம்பர், 7, 8ம் தேதிகளில் வெளியாகின.

கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் ஆதரவாளரான நடிகர் தன்வீர் கவுடா தான், வீடியோக்களை வெளியிட்டதாகப் பேசப்பட்டது. இதையடுத்து, தன்வீரிடம் மூன்று முறை சி.சி.பி., போலீசார் விசாரித்தனர். அவர் பயன்படுத்திய மொபைல் போனை பறிமுதல் செய்து, தடய ஆய்வக அறிவியல் மையத்திற்கு அனுப்பினர்.

இந்நிலையில், தடய ஆய்வக அறிவியல் மையத்தில் இருந்து, சி.சி.பி., போலீசாருக்கு தற்போது அறிக்கை கிடைத்துள்ளது. அந்த அறிக்கையில், ‘பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசாக இருந்த வீடியோ, தன்வீர் கவுடாவின் மொபைல் போனில் இருந்து தான் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளன.

மொபைல் போன் கேலரியில் இருந்த வீடியோக்கள், வாட்ஸாப் உரையாடல்களை அவர் அழித்துள்ளார். அவை மீட்கப்பட்டுள்ளன’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து, நடிகர் தன்வீர் கவுடாவை கைது செய்ய, சி.சி.பி., போலீசார், நீதிமன்றத்தில் வாரன்ட் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us