/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குரங்குகள் இறப்பு நினைவிடம் கட்ட கிராமத்தினர் முடிவு
/
குரங்குகள் இறப்பு நினைவிடம் கட்ட கிராமத்தினர் முடிவு
குரங்குகள் இறப்பு நினைவிடம் கட்ட கிராமத்தினர் முடிவு
குரங்குகள் இறப்பு நினைவிடம் கட்ட கிராமத்தினர் முடிவு
ADDED : மே 10, 2025 11:52 PM
தார்வாட்: குரங்குகள் இறந்து ஒன்பதாம் நாளான நேற்று பூஜைகள் செய்யப்பட்டன.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் குடேனகட்டி கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் பல குரங்குகள் உள்ளன. கடந்த 15 நாட்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குரங்குகள் இறக்கின்றன.
இதுவரை ஏழு குரங்குகள் இறந்துள்ளன. ஒன்பது நாட்களுக்கு முன்பு, இதுபோன்று இரு குரங்குகள் இறந்தன. சம்பிரதாயப்படி பூஜை செய்து அடக்கம் செய்யப்பட்டன.
ஒன்பதாம் நாளான நேற்று அந்த இடத்தில் பூஜைகள் செய்யப்பட்டன. இறந்த குரங்குகளுக்காக நினைவிடம் கட்ட கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.
குரங்குகள் திடீர் இறப்பு குறித்து, குந்த்கோல் கால்நடை மருத்துவர் ஹனுமந்த கவுடாவிடம் கேட்டபோது, ''அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் இறந்திருக்கலாம். கிராமத்தினர் தகவல் தெரிவித்த உடன் அங்கு சென்றோம். சிகிச்சை அளித்தும் பல குரங்குகளை காப்பாற்ற முடியவில்லை. சில குரங்குகள் உடல் நலம் தேறி வருகின்றன,'' என்றார்.