ADDED : ஏப் 08, 2026 04:34 AM

சிக்கமகளூரு: முத்தோடி வனப்பகுதியில், இரண்டு பெரிய தந்தங்கள் கொண்ட ஒற்றை யானை நடமாடுகிறது. இது, கிராமத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சிக்கமகளூரு மாவட்டத்தின் முத்தோடி வனப்பகுதியில், நுாற்றுக்கணக்கான காட்டு யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் ஒவ்வொரு விதமானவை. இதில், ஒரு யானைக்கு இரண்டு பெரிய தந்தங்கள் உள்ளன. முத்தோடி வனப்பகுதியின் நடுவே, ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஓய்வறை உள்ளது.
இந்த ஓய்வறையின் சுற்றுப்பகுதிகளில், காட்டு யானை அவ்வப்போது தென்படுகிறது. வனத்துறை ஊழியர்களை அச்சுறுத்துகிறது. ஓய்வறை பக்கத்திலேயே பலா மரம் உள்ளது. பலாப்பழத்தை சாப்பிடுவதற்காக, காட்டு யானை இதே பகுதியில் நடமாடுகிறது. வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், தினமும் அச்சத்துடன் நடமாடுகின்றனர். தோட்ட வேலை, கூலி வேலை, எஸ்டேட்களில் பணிக்கு செல்வோர், பயத்துடனே செல்கின்றனர். எந்த பகுதியில் இருந்து, யானை தாக்குமோ என்ற கிலியுடன் நடமாடுகின்றனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் அஞ்சுகின்றனர்.
யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினரிடம் மன்றாடுகின்றனர். ஊழியர்களும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர்.
