தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தரமற்ற சாலை பணிகள் குறித்து புகார் குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமத்தினர்

 தரமற்ற சாலை பணிகள் குறித்து புகார் குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமத்தினர்

 தரமற்ற சாலை பணிகள் குறித்து புகார் குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமத்தினர்


ADDED : பிப் 15, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: 'சாலை பணிகள் தரமாக இல்லை' என, புகார் அளித்தவரின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஷிவமொக்கா மாவட்டம், சொரபா தாலுகாவின் வனப்பகுதியில் உள்ள கிராமம் உளவி. இந்த கிராமத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், மூன்று முறை சாலை பணிகள் நடந்தன. அந்த பணிகள் தரமாக இல்லாததால், சாலைகள் பாழாகின. இது தொடர்பாக கிராமத்தில் வசிக்கும் சந்திரப்பா என்பவர், கிராம பஞ்சாயத்தில் புகார் அளித்தார்.

அதனால், கோபமடைந்த கிராமத்தினர், சந்திரப்பா குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். 25,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

எந்த நிகழ்ச்சிக்கும், இவரது குடும்பத்தினரை அழைக்கக்கூடாது, வேலைக்கும் அழைத்து செல்லக்கூடாது என்றும், உத்தரவிட்டுள்ளனர். இந்த குடும்பத்தினருடன் பேசியவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதற்கு பயந்து, சந்திரப்பா குடும்பத்தினரை பலரும் விலக்கி வைத்துள்ளனர்.

தங்களை ஒதுக்கி வைத்தது குறித்து, சொரபா தாசில்தார், போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகளிடம், சந்திரப்பா குடும்பத்தினர் புகார் அளித்தும் பயன் இல்லை.

கிராம கூட்டங்களில், இதுதொடர்பாக கேள்வி எழுப்பும் குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கின்றனர்.

அவர்களுக்கு கிராமத்தின் கடைகளில், மளிகை பொருட்களும் கொடுப்பது இல்லை. பள்ளி, கல்லுாரிக்கு செல்ல ஆட்டோவும் வருவது இல்லை. கிராமத்தினர் தங்களுக்கு என, கமிட்டி அமைத்து கொண்டு அராஜகம் செய்கின்றனர்.

சந்திரப்பா குடும்பத்தினர் போன்று, பல குடும்பங்கள் கிராம கமிட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இனியாவது இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி, சந்திரப்பா குடும்பத்தினர், மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us