/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாலியல் பலாத்கார வழக்கு தப்பினார் வில்லன் நடிகர்
/
பாலியல் பலாத்கார வழக்கு தப்பினார் வில்லன் நடிகர்
ADDED : ஏப் 14, 2025 06:17 AM

பெங்களூரு : வேலை வாங்கி தருவதாக கூறி, இளம் பெண்ணை பாலியல் பலாத்கார செய்த குற்றச்சாட்டில் கைதான திரைப்பட வில்லன் நடிகர் சேஷகிரி பசவராஜு, 'குற்றமற்றவர்' என போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு சுப்பிரமண்ய நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சேஷகிரி பசவராஜு. ஆரம்பத்தில் தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இவர், பின் டார்க், சஸ்பென்ஸ், கில்லாடி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்தார்.
இளம்பெண் ஒருவர், தனக்கு வங்கி வேலை வாங்கி தரும்படி, 2014ல் இவரை சந்தித்துள்ளார். அவரும், வேலை வாங்கி தருவதாக கூறி, அப்பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளார்.
இந்நிலையில், 2021ல் சுப்பிரமண்ய நகர் போலீசில், 'நடிகர் சேஷகிரி பசவராஜு, தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியதுடன் அதை திருப்பி தரவில்லை. பணம் கேட்டு சென்ற போது, எனக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்துள்ளார்' என்று புகார் அளித்தார்.
இதையடுத்து, நடிகரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் 'குற்றமற்றவர்' என்று அறிக்கை சமர்ப்பித்தது சமீபத்தில் தெரியவந்தது.
அதில், 'சேஷகிரி பசவராஜ், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யததற்கான மருத்துவ தடயம் கிடைக்கவில்லை. இவரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளனர்.

