/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வினய் குல்கர்னிக்கு மீண்டும் சிக்கல்
/
வினய் குல்கர்னிக்கு மீண்டும் சிக்கல்
ADDED : அக் 29, 2025 02:52 AM
கொலை வழக்கில் ஜாமினில் இருந்தபோது, சாட்சியங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி அழித்ததை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான, பா.ஜ., யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி சிறையில் உள்ளார். இதற்கு முன்பு அவர் சிறையில் இருந்தபோது, உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
வெளியே இருந்தபோது சாட்சியங்களை அழித்ததாக, அவர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து வினய் குல் கர்னி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, கர்நாடக உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., பதிந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்தது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.
வினய் குல்கர்னி சாட்சியங்களை அழித்ததை உறுதி செய்ததுடன், அவர் விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டது.
- நமது நிருபர் -:

