வினய் குல்கர்னி ஜாமின் மனு ஜூன் 1க்கு ஒத்திவைப்பு
வினய் குல்கர்னி ஜாமின் மனு ஜூன் 1க்கு ஒத்திவைப்பு
ADDED : மே 27, 2026 06:43 AM

பெங்களூரு: பா.ஜ., பிரமுகர் யோகே ஷ் கவுடா கொலை வழக்கில், தனக்கு அளித்த தண்டனைக்கு தடை விதிக்க கோரி, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் தெரிவிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
தார்வாட் பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரசின் வினய் குல்கர்னி உட்பட 16 பேருக்கு, சி.பி.ஐ., நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர், எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தனக்கு விதித்த தண்டனைக்கு தடை விதிக்கவும், ஜாமின் வழங்க கோரியும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், வினய் குல்கர்னி சார்பில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசா ரித்த நீதிமன்றம், 'மனுதாரர் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எனவே, மனுதாரரின் ஜாமின் மனு ஜூன் 1ம் தேதி விசாரிக்கப்படும்' என்று கூறி ஒத்தி வைத்தது.
