/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி: வீரர்களுக்கு அழைப்பு
/
வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி: வீரர்களுக்கு அழைப்பு
வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி: வீரர்களுக்கு அழைப்பு
வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி: வீரர்களுக்கு அழைப்பு
ADDED : டிச 05, 2025 09:00 AM
வாலிபால் விளையாட்டில், கர்நாடகா சார்பில் கோப்பை வெல்ல விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக வாலிபால் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கை:
உத்தர பிரதேசத்தின், வாரணாசியில் 2026 ஜனவரி 4 முதல் 11ம் தேதி வரை, ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்கும், 72வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக கர்நாடக அணியினர் தேர்வு செய்யப்படுவர்.
போட்டியில் பங்கேற்க, கர்நாடக வாலிபால் அசோசியேஷன் தயாராகி வருகிறது. கர்நாடகா சார்பில் விளையாட, ஆண்கள் மற்றும் மகளிர் வாலிபால் விளையாட்டு வீரர்கள் அணிகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. டிசம்பர் 8ம் தேதி, காலை 9:00 மணிக்கு, இந்திய விளையாட்டு ஆணையம், பெங்களூரில் அணியினரை தேர்வு செய்கிறது. இதில் தேர்வானவர்கள், வாரணாசியில் நடக்கும் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட் டியில், மாநிலம் சார்பில் பங்கேற்கலாம்.
தகுதியான விளையாட்டு வீரர்கள், நிர்ணயித்த நேரத்துக்குள் கர்நாடக வாலிபால் அசோசியேஷன் தலைவர் ஹர்ஷா மற்றும் முதன்மை செயலர் அந்தோணி ஜோசப்பை சந்தித்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். கர்நாடக வாலிபால் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆண்கள், மகளிருக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். 20 நாட்கள் வரை உணவு, தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

