தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ காபி உருவான வரலாற்றை அறிய வேண்டுமா?

 காபி உருவான வரலாற்றை அறிய வேண்டுமா?

 காபி உருவான வரலாற்றை அறிய வேண்டுமா?


ADDED : மே 06, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சிக்கமகளூரு மாவட்டம் என்றால், முல்லைய்யனகிரி பாபா புடன் கிரி மட்டும் தானா. வேறொரு அற்புதமான சுற்றுலா இடமும் இங்குள்ளது. உங்களின் சுற்றுலா லிஸ்டில், அந்த இடத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். அங்கு சென்றால் புதிய அனுபவம் கிடைக்கும்.

பொதுவாக பலருக்கும், தி னமும் காலை கண் விழித்தவுடன், சூடான காபி அருந்தாவிட்டால், தலையே வெடித்து விடும். காபி பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. கர்நாடகாவின் சிக்கமகளூரு காபி அதிகமாக விளையும் மாவட்டமாகும். இங்கு காபி தோட்டங்கள் அதிகம். எங்கு பார்த்தாலும் பசுமையான, நறும ணம் வீசும். இதற்காகவே சுற்றுலா பயணியருக்கு சிக்கமகளூரு பிடித்தமான இடமாகும்.

ரூ.30 மட்டுமே தற்போது சுற்றுலா பயணியருக்காகவே, சிக்கமகளூரில் 'காபி மியூசியம்' அமைக்கப்பட்டுள்ளது. காபி வரலாற்றை தெரிந்து கொள்ள, இது சிறப்பான இடமாகும். இங்கு நுழைவு கட்டணம் வெறும் 30 ரூபாய் மட்டுமே. 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, அனுமதி இலவசம்.

விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், காபி மியூசியத்துக்கு வரு கின்றனர்; ஆர்வமாக தகவல் கேட்கின்றனர்.

இந்திய கலாசாரத்தில், காபி எந்த அளவுக்கு கலந்துள்ளது, உலக அளவில் காபிக்கு உள்ள மகத்துவம் என்ன என்பதை, விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

காபி உருவான வரலாற்றையும் அறியலாம். சிக்கமகளூரு மாவட்டத்தின், கடூர் சாலையி ல் உள்ள, மாவட்ட பஞ்சாயத்து அலுவலக பின் பகுதியில், காபி மியூசியம் உள்ளது.

இங்கு புராதன காலத்து காபி கிரைண்டர்கள், ரோஸ்டர்களை காணலாம். காபியின் பல்வேறு ரகங்கள், அதன் மேம்பாடுகள் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினால், ஒரு முறை காபி மியூசியத்துக்கு செல்லுங்கள்.

இனிப்பு பண்டம் பலவிதமான சுவைகளில் காபியை அருந்தலாம். காபி கொட்டைகள் உட்பட, காபி சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கலாம். சிற்றுண்டிகள், இனிப்பு பண்டங்களை சாப்பிடலாம்.

மியூசியம் உள்ளே போட்டோ, வீடியோ எடுக்க அனுமதி உள்ளது.

ஆனால் பிளாஷ் பயன்படுத்த கூடாது. சில பொது விடுமுறை நாட்களில், காபி பொருட்காட்சி மூடப்படும். எனவே இதை தெரிந்து கொண்டு, சுற்றுலாவை திட்டமிடுவது நல்லது.

எப்படி

செல்வது?

சிக்கமகளூரில் இருந்து 3 கி.மீ., தொலைவில், காபி மியூசியம் உள்ளது. மாநிலத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்க மகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது.

சிக்கமகளூரில் இருந்து, கடூரு வழியாக செல்லும், ஒவ்வொரு அரசு பஸ்களும், காபி மியூசியம் அருகில் நின்று செல்கி ன்றன.

இங்கிருந்து வாடகை ஆட்டோவில், மியூசியம் செல்லலாம்.

பார்வை நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

தொலைபேசி: 080 - 2226 6991

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us