/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒழுக்கத்தை உங்களிடம் கற்க வேண்டுமா? பா.ஜ.,வுக்கு காங்., ஹரிபிரசாத் பதிலடி
/
ஒழுக்கத்தை உங்களிடம் கற்க வேண்டுமா? பா.ஜ.,வுக்கு காங்., ஹரிபிரசாத் பதிலடி
ஒழுக்கத்தை உங்களிடம் கற்க வேண்டுமா? பா.ஜ.,வுக்கு காங்., ஹரிபிரசாத் பதிலடி
ஒழுக்கத்தை உங்களிடம் கற்க வேண்டுமா? பா.ஜ.,வுக்கு காங்., ஹரிபிரசாத் பதிலடி
ADDED : ஜன 23, 2026 06:04 AM

பெங்களூரு: 'சட்டசபையில் ஆபாச படம் பார்த்தவர்களிடம் இருந்து, ஒழுக்கத்தை கற்று கொள்ள வேண்டுமா' என்று, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டசபையில் அரசின் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்த, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை மறிக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் செயல்பட்ட வீடியோ வெளியானது. இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜ., ஹரிபிரசாத்தை ரவுடி என்று விமர்சனம் செய்ததுடன், சட்டசபையில் ஒழுக்கமாக செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹரிபிரசாத்தின் எக்ஸ் வலைதள பதிவு:
சட்டசபையின் ஒழுக்கம், கண்ணியம், மரியாதை பற்றி பேச பா.ஜ., உறுப்பினர்களுக்கு என்ன தகுதி உள்ளது.
சட்டசபையில் மொபைல் போனில் ஆபாச படத்தை பார்த்து, நமது மாநிலத்தை அவமானப்பட வைத்தவர்களிடம் இருந்து, நான் ஒழுக்கத்தை கற்று கொள்ள வேண்டுமா.
சபாநாயகர் முகத்தில் காகிதத்தை வீசி அவரை அவமதித்த, பா.ஜ., உறுப்பினர்களுக்கு என்னை பற்றி பேச, துளி கூட தகுதி இல்லை.
கவர்னர் என்ற அரசியலமைப்பு பதவியை தவறாக பயன்படுத்தி, மாநில அரசியலில் இருண்ட நாளை உருவாக்கி உள்ளனர். கர்நாடக மக்கள் வரி பணத்தில், அதிகாரத்தை கவர்னர் அனுபவித்து வருகிறார். பதிவு செய்யப்படாத அமைப்பில் இருந்து வரும் பணத்தில் இல்லை. அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டால், கவர்னராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி எங்கள் உரிமையை நிலைநாட்டுவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
முன்னதாக கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பிய போது, ஹரிபிரசாத்தின் சட்டையின் ஒரு பகுதி கிழிந்தது. தன்னை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல், கோழைத்தனமாக சட்டையை கிழித்ததாக, பா.ஜ., உறுப்பினர்களை சாடியுள்ளார்.

