/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஜட்டி' கொள்ளையர்கள் கவுரிபிதனுாரில் எச்சரிக்கை
/
'ஜட்டி' கொள்ளையர்கள் கவுரிபிதனுாரில் எச்சரிக்கை
ADDED : ஜூலை 07, 2025 07:12 AM

சிக்கபல்லாபூர் : கவுரிபிதனுாரில் 'ஜட்டி' கொள்ளையர்கள் நடமாடுவதால், பொது மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி போலீசார் எச்சரித்துள்ளனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் நகர போலீசாருக்கு ஜூலை 5ம் தேதி அதிகாலை தொடர்பு கொண்ட நபர், 'தங்கள் வீட்டு பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுகின்றனர்' என்று தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசாரும் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பின், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நான்கு பேர், முகத்தை துணியால் மூடிக்கொண்டு, ஜட்டி, ஷாட்ஸ் அணிந்து கொண்டு, முதுகில் பேக், கையில் இரும்பு தடியுடன் சுற்றினர். வீடுகள் பூட்டி உள்ளனவா, நாய்கள் உள்ளனவா என கண்காணித்தபடி செல்வது கேமராவில் பதிவாகி உள்ளன.
இக்கும்பல் வீடுகளுக்குள் புகுந்து, பயங்கர ஆயுதங்களால் தாக்கி, தங்க நகைகளை கொள்ளை அடிப்பர். எனவே, பொது மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கவுரிபிதனுார் நகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.