/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துாய்மையில்லாத சுற்றுப்புறங்கள் அபராதம் விதிப்பதாக எச்சரிக்கை
/
துாய்மையில்லாத சுற்றுப்புறங்கள் அபராதம் விதிப்பதாக எச்சரிக்கை
துாய்மையில்லாத சுற்றுப்புறங்கள் அபராதம் விதிப்பதாக எச்சரிக்கை
துாய்மையில்லாத சுற்றுப்புறங்கள் அபராதம் விதிப்பதாக எச்சரிக்கை
ADDED : ஜூலை 23, 2025 08:41 AM
பெங்களூரு : டெங்கு கொசுக்கள் உருவாகும் வகையில், தங்கள் சுற்றுப்புறங்களை துாய்மை இல்லாமல் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெங்களூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 210 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 2,800க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதை அனைத்தையும் கருத்தில் கொண்ட சுகாதாரத்துறை, பெங்களூரு மாநகராட்சியுடன் இணைந்து நகரின் மழைநீர் தேங்கியுள்ள பல பகுதிகளில், கொசு மருந்து அடித்து, டெங்கு கொசுக்களை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
அதுபோல, மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்திருக்கும்படி, சுகாதாரத்துறை பல முறை அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காமல் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. வீடு, பள்ளி, கல்லுாரி, ஹோட்டல், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றின் சுற்றுப்புறங்கள் துாய்மையாக பராமரிக்கப்படாமல், டெங்கு கொசு உருவாகும் வகையில் இருந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.