தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தற்கொலை செய்த தொழிலதிபர் 'ஹனி டிராப்'பில் சிக்கினாரா?

 தற்கொலை செய்த தொழிலதிபர் 'ஹனி டிராப்'பில் சிக்கினாரா?

 தற்கொலை செய்த தொழிலதிபர் 'ஹனி டிராப்'பில் சிக்கினாரா?


ADDED : மார் 26, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் ராய், நடிகை ஒருவர் விரித்த, 'ஹனி டிராப்' வலையில் சிக்கியதற்கான ஆதாரம் கிடைத்து இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சி.ஜே.ராய், 57. தொழில் அதிபராக இவர், ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்தார். கடந்த ஜனவரி 30ம் தேதி பெங்களூரு அசோக்நகரில் உள்ள ராய் அலுவலகத்தில், கேரள வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த நேரத்தில் தனது அறையில் துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வருமான வரி அதிகாரிகள் கொடுத்த தொல்லையே, ராய்தற்கொலைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததால், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில், ராய் தற்கொலைக்கு வருமான வரி அதிகாரிகள் காரணம் இல்லை என்றும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்றதும் தெரிந்தது. இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிந்தது.

இந்நிலையில், ராய் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது அவர் ஹனி டிராப் வலையில் சிக்கியதற்கான ஆதாரம், எஸ்.ஐ.டி.,யிடம் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல தொழில் அதிபர் என்பதால் நடிகையர், 'செலிபிரட்டி'கள் தொடர்பு ராய்க்கு இருந்து உள்ளது. இந்நிலையில் நடிகை ஒருவருடன், ராய் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், ராயுடன் நெருக்கமாக இருந்ததை அந்த நடிகை வீடியோ எடுத்து, ஹனிடிராப் முறையில் பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆதாரம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களில் அந்த நடிகையிடம் விசாரணை நடத்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us