/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோடையை சமாளிக்க தயாராகும் பெங்களூரு; குடிநீர் வீணாகாமல் இருக்க கெடுபிடி

ADDED : பிப் 18, 2025 07:28 AM

பெங்களூரு: பெங்களூருவில் கார் கழுவுதல், தோட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு தொழில் நகரமாக மாறி வருகிறது. இதனால் கோடைக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது கடினமாக இருந்து வருகிறது.கடந்த கோடைக் காலத்தில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், 'பெங்களூருவில் கார் கழுவுதல், தோட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்' என நகர குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும். வரும் கோடை குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பாளர்கள் 1916 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு மீறல்களைப் புகாரளிக்கலாம். வரும் மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பெங்களூருவில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.