/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2026 இறுதிக்குள் மங்களூரில் நீர் மெட்ரோ சேவை துவக்கம்
/
2026 இறுதிக்குள் மங்களூரில் நீர் மெட்ரோ சேவை துவக்கம்
2026 இறுதிக்குள் மங்களூரில் நீர் மெட்ரோ சேவை துவக்கம்
2026 இறுதிக்குள் மங்களூரில் நீர் மெட்ரோ சேவை துவக்கம்
ADDED : மார் 27, 2025 05:36 AM

தட்சிண கன்னடா: ''வரும் 2026ல் மங்களூரில் நீர் மெட்ரோ திட்டம் துவங்கப்பட உள்ளது,'' என, கர்நாடக நீர் போக்குவரத்து ஆணைய முதன்மை செயல் அதிகாரி ஜெயராம் ராய்பூர் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கொச்சியில், நாட்டின் முதல் நீர் மெட்ரோ, 2021ல் துவங்கியது.
இத்தகைய திட்டத்தை, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரிலும் துவக்கப்படுமென அரசு அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக, கர்நாடக நீர் போக்குவரத்து ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெயராம் ராய்பூர் கூறியதாவது:
மங்களூரில் நீர் மெட்ரோ போக்குவரத்தை, 2026க்குள் துவங்க, விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பொது தனியார் கூட்டுடன் இத்திட்டம் தயாராகி வருகிறது.
1,600 கோடி ரூபாயில், பஜால் சாலையில் உள்ள நேத்ராவதி நதியில் இருந்து குருபுரா நதி வழியாக மருவூரு டவுன் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில், 17 நடைபாலங்கள் கட்டப்பட உள்ளன.
பயணியர், சாலை போக்குவரத்தை சுலபமாக சென்றடைய, சாலையை இணைக்கும் வகையில் இப்பாலங்கள் வடிவமைக்கப்படும்.
ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் கீழ், 11 நடைபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை, நீர் மெட்ரோவுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இத்திட்டத்திற்கான செலவு குறையும். 10 மெட்ரோ படகுகள் பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே கொச்சி நீர் மெட்ரோ ஆணையத்தின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
அங்குள்ள நீர் மெட்ரோ செயல்பாடுகளை கர்நாடக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். விரைவில் நீர் மெட்ரோ போக்குவரத்து அமல்படுத்தப்படும்.
மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கும் படகுகள் பயன்படுத்தப்படும். இந்த மெட்ரோவில் அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.