/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்'
/
'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்'
ADDED : செப் 30, 2025 05:41 AM

பெங்களூரு: ''ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்,'' என, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது காவரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை வீணாக்கக்கூடாது. காவிரி நீர் புனிதமானது மற்றும் விலைமதிப்பற்றது.
கே.ஆர்.எஸ்., அணையில் நீர் விளையாட்டுகள் சுற்றுலாப்பயணியரிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. 80க்கும் மேற்பட்ட நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். வார இறுதி நாட்களில் சுற்றுலாப்பயணியர் வருகை தந்து, நீர் விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.