தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நீர்நிலைகள் விளையாட்டுகளுக்கு ஆக., 31 வரை தடை

 நீர்நிலைகள் விளையாட்டுகளுக்கு ஆக., 31 வரை தடை

 நீர்நிலைகள் விளையாட்டுகளுக்கு ஆக., 31 வரை தடை


ADDED : ஜூன் 01, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தர கன்னடா: உத்தர கன்னடா கலெக்டர் லட்சுமி பிரியா வெளியிட்ட அறிக்கை:

பருவ மழை தொடங்கியுள்ளதாலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாலும், மாவட்டத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை, நீர் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில், படகு சவாரி, ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட எந்த நீர் விளையாட்டுகளும் நடத்தப்படக்கூடாது. அனைத்து வகையான நீர் சாகச விளையாட்டுகளும் இந்த உத்தரவு பொருந்தும்.

இந்த உத்தரவுகளை மீறி எந்தவொரு கடற்கரையிலோ அல்லது ஆற்றிலோ நீர் சார்ந்த விளையாட்டுகளை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விளையாட்டு மகிழ்ச்சியை விட மக்களின் உயிரே முக்கியமானது. மக்கள் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us