sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

குடிநீர் வாரியம் ஓ.டி.எஸ்., திட்டம் கட்டண பாக்கி வசூலிக்க அதிரடி

/

குடிநீர் வாரியம் ஓ.டி.எஸ்., திட்டம் கட்டண பாக்கி வசூலிக்க அதிரடி

குடிநீர் வாரியம் ஓ.டி.எஸ்., திட்டம் கட்டண பாக்கி வசூலிக்க அதிரடி

குடிநீர் வாரியம் ஓ.டி.எஸ்., திட்டம் கட்டண பாக்கி வசூலிக்க அதிரடி


ADDED : ஏப் 07, 2025 04:34 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : குடிநீர் கட்டணத்தை கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்த முடியாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பெங்களூரு குடிநீர் வாரியம், கோடிக்கணக்கான ரூபாய் குடிநீர் கட்டணத்தை வசூலிக்க 'ஒன் டைம் செட்டில்மென்ட்' திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கிறது.

இது குறித்து பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களூரும் ஒன்றாகும். இந்நகரில் குடிநீர் வாரியம், 11.14 லட்சம் குடிநீர் இணைப்புகளை அளித்துள்ளது.

வருவாய் இல்லை


பெங்களூரின் 1.55 கோடி மக்களின் தாகத்தை தணிக்கிறது. 100 கி.மீ., தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து, குடிநீர் கொண்டு வரும் குடிநீர் வாரியத்துக்கு, குடிநீர் கட்டணம் மட்டுமே ஒரே வருவாய். வேறு வருவாய் இல்லை.

குடிநீர் இணைப்பு பெற்றுள்ள மத்திய, மாநில அரசுகளின் துறைகள், குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டடங்கள் சரியாக கட்டணம் செலுத்துவதில்லை. இதன் விளைவாக குடிநீர் வாரியம், அன்றாட நிர்வகிப்புக்கு பணம் இல்லாமல் திணறுகிறது. பல ஆண்டுகளாக 616.66 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சி, சொத்து வரி பாக்கி வைத்துள்ள மக்களிடம் வரி வசூலிக்க, 'ஒன் டைம் செட்டில்மெண்ட்' திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பாக்கியை ஒரே முறையாக செலுத்துவோருக்கு, அபராதம், வட்டி ரத்து செய்யப்படுகிறது.

இதே திட்டத்தை செயல்படுத்த, குடிநீர் வாரியமும் ஆலோசிக்கிறது. ஒரே முறையில் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்தினால், அபராதம், வட்டி ரத்து செய்யப்படும். வரும் மே மாதம் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மின் கட்டணம்


மாதந்தோறும் குடிநீர் கட்டணமாக, 119.60 கோடி ரூபாய் வசூலாகிறது. ஆனால் 170 கோடி ரூபாய் செலவாகிறது. குடிநீர் வாரியம் ஒவ்வோர் மாதமும் 51 கோடி ரூபாய் நஷ்டத்தை அனுபவிக்கிறது.

மாதந்தோறும் 59 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறது.

காவிரி 5ம் கட்ட திட்டம் முழுமை அடைந்தால், மின் கட்டணம் 86.07 கோடி ரூபாயாக அதிகரிக்கும். நிர்வகிப்பு செலவும் மாதம் 210 கோடி ரூபாயை தாண்டும்.

வருவாய் பற்றாக்குறையால், 566 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளது. சரியாக குடிநீர் கட்டணத்தை வசூலிக்கா விட்டால், குடிநீர் வாரியம் செயல்படுவது கஷ்டம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, மாநில அரசு, நிதியுதவி வழங்கவில்லை. கோடைக்காலத்தில் குடிநீர் நிர்வகிப்பு பொறுப்பை, குடிநீர் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது.

மாநகராட்சி வசம் இருந்த 1,145 சுத்த குடிநீர் மையங்கள், 4,000க்கும் மேற்பட்ட போர்வெல்களை, குடிநீர் வாரியத்திடம் கை மாற்றியுள்ளது. இவற்றை நிர்வகிக்க வேண்டியுள்ளது. எனவே ஓ.டி.எஸ்., திட்டத்தை செயல்படுத்தி, கட்டண பாக்கியை வசூலிக்க ஆலோசிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us