தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'நாங்கள் ஊசியை போல தைக்கிறோம் கத்திரிக்கோல் போல வெட்டுவதில்லை': சிவக்குமார்

'நாங்கள் ஊசியை போல தைக்கிறோம் கத்திரிக்கோல் போல வெட்டுவதில்லை': சிவக்குமார்

'நாங்கள் ஊசியை போல தைக்கிறோம் கத்திரிக்கோல் போல வெட்டுவதில்லை': சிவக்குமார்


UPDATED : அக் 11, 2026 05:31 AM

ADDED : அக் 10, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:31 AM ADDED : அக் 10, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''நாங்கள் ஊசியை போல தைக்கிறோம்; கத்திரிக்கோல் போல வெட்டுவதில்லை,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரில் முதல்வர் சிவகுமாரை, பல்வேறு மடாதிபதிகள் நேற்று சந்தித்து பேசினர்.

நாங்கள் ஊசியை போல தைக்கிறோம்; கத்திரிக்கோல் போல வெட்டுவதில்லை. எங்கள் சமூகம், மதங்களை ஒன்றிணைக்குமே தவிர, பிரிக்காது. ஒற்றுமையில் தான் வலிமை இருக்கிறது. நான் பல மடங்களுக்கு சென்றுள்ளேன். அங்குள்ள சடங்குகளையும், நடைமுறைகளையும் கவனித்திருக்கிறேன். வீர கங்காதர் அஜ்ஜய்யா பெயரில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டேன். இதை கண்ட பல தலைவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சித்தகங்கா மடத்தின் முந்தைய மடாதிபதி சிவகுமார சுவாமிகளுக்கு, முஸ்லிம் டாக்டர் தான் அறுவை சிகிச்சை செய்தார். அப்போது மதம், ஜாதியை விட மனிதநேயமே முக்கியம் என்றும், அனைவரும் சமம் என்றும் கூறியிருந்தேன். இந்த கூற்றை பலர் விமர்சித்தனர். இருப்பினும் அதை பொருட்படுத்தவில்லை.

இம்முறை தசராவை கொப்பாலில் உள்ள கவி மடத்தின் மடாதிபதி கவி சித்தேஸ்வர சுவாமிகள் துவக்கி வைக்கிறார். சுவாமிகளின் ஆளுமை மகத்தானது. மாநிலம் முழுதும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளது. தசராவை துவக்கி வைப்பது தொடர்பாக அவரிடம் பேசி, அனுமதி அளித்த பின்னரே அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us