/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பழிக்கு பழியாக உன்னை தீர்ப்போம்'
/
'பழிக்கு பழியாக உன்னை தீர்ப்போம்'
ADDED : மே 16, 2025 10:16 PM

மைசூரு,: பழிக்கு, பழியாக உன்னை தீர்ப்போம்' என, சமூக வலைத்தளம் மூலம் ஹிந்து அமைப்பின் புனித் கெரேஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
மங்களூரு பஜ்பே கின்னிபதவு பகுதியில் இம்மாதம் 1ம் தேதி இரவு பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பழிக்கு, பழி வாங்குவோம் என்று சமூக வலைத்தளங்களில் நிறைய பேர் கருத்து பதிவிட்டனர்.
இதேமாதிரியான கருத்துகள் பதிவிட்டவர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மைசூரு உதயகிரியின் அக்ரம்கான் என்பவர், தன் சமூக வலைத்தள பக்கத்தில், ஹிந்து அமைப்பின் புனித் கெரேஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
'இத்ரிஷ் பாஷா கொலைக்கு பழிக்கு, பழியாக உன்னை தீர்ப்போம்' என்று பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து புனித் கெரேஹள்ளி நேற்று முன்தினம் இரவு உதயகிரி போலீசில் புகார் செய்தார். அக்ரம்கான் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
மாண்டியாவை சேர்ந்த இத்ரிஷ் பாஷா கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி ராம்நகரின் சாத்தனுார் பகுதியில் இறந்து கிடந்தார்.
பசுமாட்டை இறைச்சிக்காக கடத்திச் சென்றதால் இத்ரிஷ் பாஷாவை அடித்துக் கொன்றதாக, புனித் கெரேஹள்ளி, அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது அனைவரும் ஜாமினில் வெளியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.