தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு தமிழ் சங்கத்தில் வரும் 17ல் திருமண மேடை

 பெங்களூரு தமிழ் சங்கத்தில் வரும் 17ல் திருமண மேடை

 பெங்களூரு தமிழ் சங்கத்தில் வரும் 17ல் திருமண மேடை


ADDED : மே 16, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு தமிழ் சங்கத்தில் வரும் 17ம் தேதி, 168வது திருமண மேடை நேர்காணல் நடக்கிறது.

பெங்களூரு தமிழ் சங்கத்தின் செயலர் சம்பத் கூறியுள்ளதாவது:

பெங்களூரு தமிழ் சங்கத்தில் 2002ல் திருமண மேடை துவங்கியது. இதன் மூலம், தமிழினத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் பதிவு செய்து, 'திருமணமேடை' எனும், ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்று சேர்ந்து, பயனடைந்து வருகின்றனர். இதன் வழியாக பலர், கலப்பு திருமணங்களையும் செய்கின்றனர்.

கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களும், மணமுறிவு பெற்றவர்களும், நம் சங்கத்தின் திருமணமேடையில் பதிவு செய்து புதிய வாழ்க்கையை துவங்கி உள்ளனர்.

பெங்களூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கர்நாடகாவின் பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், மும்பை, டில்லி, வெளிநாடுகளில் பணியாற்றும் பலரும் நமது திருமண மேடையில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்கள் மேடையின் வழியாக நடந்துள்ளன.

இந்நிகழ்ச்சியில் பதிவு செய்த ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் நேரில் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

இத்தகைய சிறப்பு கொண்ட 168வது திருமண மேடை நேர்காணல், நாளை காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

இவ்வாறு சங்க செயலர் சம்பத் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us