/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேற்கு வங்க இளம்பெண் பலாத்காரம்? ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவர் கைது!
/
மேற்கு வங்க இளம்பெண் பலாத்காரம்? ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவர் கைது!
மேற்கு வங்க இளம்பெண் பலாத்காரம்? ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவர் கைது!
மேற்கு வங்க இளம்பெண் பலாத்காரம்? ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவர் கைது!
ADDED : ஏப் 18, 2025 06:59 AM
தட்சிண கன்னடா: -மங்களூரின் உல்லாலில் நள்ளிரவில் வெளி மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் புகார் செய்து உள்ளார். சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் உல்லால் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலையில் அங்குள்ள வீட்டின் கதவை இளம் பெண் ஒருவர் தட்டினார்.
கதவை திறந்தவர்கள், இளம் பெண் அரை மயக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பேச முடியாமல் சைகையால் தண்ணீர் கேட்டார். அவர்களும் தண்ணீர் கொடுத்தனர். உடனடியாக உல்லால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த அவர்கள், இளம் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் விசாரித்த போது, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கேரள மாநிலம், உப்பாலில் தங்கியிருந்தாகவும் தெரிவித்துள்ளார். ஆட்டோவில் வந்த மூன்று பேர், தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்,
இதையடுத்து, அவரின் மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்தனர். கடைசியாக அவர் பயணித்த ஆட்டோ ஓட்டுநருக்கு 'கூகுள் பே' செய்திருந்ததை வைத்து ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூன்று பேர் பிடிபட்டு உள்ளனர்.
நடந்தது என்ன?
மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நேற்று அளித்த பேட்டி:
இச்சம்பவம் உல்லால் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று (நேற்று) அதிகாலை 1:30 மணி அளவில் நடந்து உள்ளது. போலீசின் 112 எண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு சென்ற போலீசார், அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, புகார் செய்து உள்ளார். விசாரணை நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண், மேற்கு வங்கம், கூச் பீஹாரை சேர்ந்தவர். கேரளாவில் உள்ள மரக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். மங்களூரில் வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்ததால், தன் ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் மங்களூரு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபமடைந்த ஆண் நண்பர், இளம் பெண்ணின் மொபைல் போனை கீழே போட்டு உடைத்துவிட்டு சென்று விட்டார். தனது மொபைல் போனை, பழுது பார்ப்பதற்காக, ஆட்டோவில் இளம் பெண் கடைக்கு சென்று உள்ளார்.
இந்த மொபைல் போனை பழுது சரிபார்க்க, பல மணி நேரமானது. இந்நேரத்தில் இளம் பெண்ணும், ஆட்டோ ஓட்டுநரும் நண்பர்களாகினர். பழுது பார்த்ததற்கான கட்டணத்தையும், ஆட்டோ ஓட்டுநரே கொடுத்துள்ளார்.
அப்போது இளம்பெண், தான் மேற்குவங்கம் செல்வதால், தன்னை ரயில் நிலையத்தில் விடும்படியும் கூறி உள்ளார். ஆனால் ஆட்டோ ரயில் நிலையம் செல்வதாக கூறி, தனது இரு நண்பர்களை வரவழைத்து, அவர்களையும் ஆட்டோவில் ஏற்றி சென்று உள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று, அப்பெண்ணை மதுபானம் குடிக்க வைத்தனர்.
சுயநினைவு இழந்த அவரை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் செய்து உள்ளார். மருத்துவ அறிக்கை கிடைத்த பின் தான், அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளரா என்பது தெரிய வரும். இவ்வழக்கு தொடர்பாக, முல்கியின் ஆட்டோ ஓட்டுநர் பிரபுராஜ், கும்பாலாவை சேர்ந்த மணி, மிதுன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.