விபச்சாரம் செய்வதாக கூறி மேற்குவங்க பெண் மீது தாக்குதல்
விபச்சாரம் செய்வதாக கூறி மேற்குவங்க பெண் மீது தாக்குதல்
ADDED : ஏப் 07, 2026 05:28 AM
வர்த்துார்: விபச்சாரம் செய்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து, மேற்கு வங்க பெண்ணை தாக்கிய, நான்கு பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, 26 வயது பெண், பெங்களூரு வர்த்துாரில் வாடகை வீட்டில் வசிக்கிறார்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்கிறார். இவரது வீட்டிற்கு ஒரு வாலிபர் அடிக்கடி வந்து செ ன்றுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் கவனித்து உள்ளனர். அந்த பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக பேசிக் கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவும், பெண்ணின் வீட்டிற்கு வேறொரு வாலிபர் வந்தார். இருவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேர், அங்கிருந்த பெண் மற்றும் வாலிபரிடம் தகராறு செய்து தாக்கினர்.
பெண்ணை வீட்டில் இருந்து வெளியே சாலைக்கு இழுத்து வந்து, 'மேற்கு வங்கத்தில் இருந்து இங்கு வந்து விபச்சாரம் செய்கிறாராயா' என்று கேட்டு தாக்கினர். அந்த நேரத்தில் வாலிபர் அங்கிருந்து தப்பினர். நான்கு பேரிடம் இருந்து அந்த பெண்ணை சிலர் மீட்டனர்.
தாக்குதலுக்கு ஆளான பெண் அளித்த புகாரில், நான்கு பேர் மீது வர்த்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
