ADDED : ஜூன் 29, 2026 10:40 PM

பொம்மனஹள்ளி: வாடகை வீட்டில் தனியாக வசித்த, மேற்கு வங்க பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் கிருஷ்ணா பர்மன், 40. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெங்களூரின் ஹொங்கசந்திரா முனியப்பா லே - அவுட்டில் தனியாக வசித்தார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் சமையல் வேலை செய்தார்.
நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணா பர்மனின் வீட்டின் கதவு பாதியளவு திறந்து கிடந்தது. அக்கம்பக்கத்தினர் அழைத்தும் எந்த பதிலும் இல்லை. வீட்டு உரிமையாளர் உள்ளே சென்று பார்த்த போது கிருஷ்ணா பர்மன் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இரும்பு கம்பியால் அடித்து அவரை யாரோ கொன்றதும் தெரிந்தது. கொலையாளிகளை கைது செய்ய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, பொம்மனஹள்ளி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் மூன்று பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
