/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிக்கியது திமிங்கிலம்! ஹாசன் மாவட்டத்தில் குற்றவாளியை அள்ளியது பல மாநிலங்களில் ரூ. 150 கோடி சுருட்டிய நபர் ரூ.57 லட்சம் மோசடி வழக்கில் தற்போது சுற்றி வளைப்பு

ADDED : அக் 12, 2025 03:51 AM

தாவணகெரே: தொழிலதிபரின் வங்கிக்கணக்கில் இருந்து 57 லட்ச ரூபாயை மோசடி செய்த வழக்கை போலீசார் விசாரித்தபோது, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து 150 கோடி ரூபாயை விழுங்கி, ஏப்பம் விட்ட திமிங்கிலம், போலீசாரின் வலையில் சிக்கியது. தாவணகெரே நகரின், நிட்டுவள்ளியில் வசிப்பவர் பிரமோத்; கட்டுமான தொழிலதிபர். இவர் நிட்டுவள்ளியில் உள்ள வங்கி ஒன்றில், கணக்கு வைத்துள்ளார். நடப்பாண்டு ஆகஸ்டில் இவரது வங்கிக்கணக்கில் இருந்து, 52.60 லட்சம் ரூபாய் கழிக்கப்பட்டதாக, அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்தது. அவர் பணப்பரிமாற்றம் செய்யவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர், வங்கிக்கு சென்று விசாரித்தபோது, ஆன்லைன் மூலம் பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, தாவணகெரே சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், பிரமோத் உடனடியாக புகார் அளித்தார்.
சிறப்புக்குழு போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தாவணகெரே சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தின் டெபுடி எஸ்.பி., பங்காளி நாகப்பா தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர், அதிரடியாக விசாரணை நடத்தி, சையத் அர்பாத், 28, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின், சாந்தி நகரில் வசிப்பவர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி செய்து வந்தார் .
இவரிடம் விசாரணை நடத்தியதில், இவரும், ஹைதராபாத்தை சேர்ந்த உபேத், 30, என்பவருடன் சேர்ந்து, பலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது .
உத்தர பிரதேசத்தின், காஜியாபாத், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர், ஆந்திராவின் ஏலுார், மஹாராஷ்டிராவின், மும்பை, கர்நாடகாவின் பெங்களூரு, தாவணகெரே உட்பட, பல்வேறு நகரங்களில் நடந்த சைபர் குற்றங்களில் இருவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
ரூ.18 கோடி முடக்கம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 19 வரை, சையத் அர்பாத் கணக்கில் 150 கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்யப்பட்டதை, போலீசார் கண்டுப்பிடித்தனர். இதில் 132 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. 18 கோடி ரூபாயை போலீசார் முடக்கினர். அதில் 52.60 லட்சம் ரூபாயை பிரமோதிடம் ஒப்படைத்தனர்.
இவருடன் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட உபேத், தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
சைபர் குற்றத்தில் ஈடுபட்ட சையத் அர்பாத், இப்போதே முதன் முறையாக போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சையத் அர்பாத் மற்றும் உபேத் ஆகிய இருவருக்கும் நாட்டின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள 127 சைபர் மோசடி வழக்குகளில் தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. - பங்காளி நாகப்பா, டெபுடி எஸ்.பி.,