sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கடந்த பட்ஜெட்டில் பெங்களூருக்கு அறிவித்த திட்டங்கள் என்னாச்சு?: ... கோப்புகளில் துாங்குவதாக பொதுமக்கள் குமுறல்

/

கடந்த பட்ஜெட்டில் பெங்களூருக்கு அறிவித்த திட்டங்கள் என்னாச்சு?: ... கோப்புகளில் துாங்குவதாக பொதுமக்கள் குமுறல்

கடந்த பட்ஜெட்டில் பெங்களூருக்கு அறிவித்த திட்டங்கள் என்னாச்சு?: ... கோப்புகளில் துாங்குவதாக பொதுமக்கள் குமுறல்

கடந்த பட்ஜெட்டில் பெங்களூருக்கு அறிவித்த திட்டங்கள் என்னாச்சு?: ... கோப்புகளில் துாங்குவதாக பொதுமக்கள் குமுறல்


ADDED : மார் 05, 2025 11:05 PM

Google News

ADDED : மார் 05, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா, 2025 - 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகிறார். இதில், பெங்களூருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், கடந்தாண்டு பட்ஜெட்டில் பெங்களூருக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள், கோப்புகளில் துாங்குவதாக பொது மக்கள் குமுறுகின்றனர்.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான, கர்நாடக காங்கிரஸ் அரசு வரும் 7ம் தேதி, 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் சித்தராமையாவே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்துக்கு என்ன வேண்டும் என்பதை, முதல்வர் சித்தராமையாவிடம் விவரித்துள்ளனர். மக்களும் தங்களின் மாவட்டத்துக்கு என்ன கிடைக்கும் என, ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால், கடந்தாண்டு அறிவித்த திட்டங்களையே, இன்னும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக பெங்களூருக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவைகள் செயல்பாட்டுக்கு வரவில்லை.

முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுத்து, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு நகர வளர்ச்சி துறையை பெற்று கொண்டார். பொறுப்பேற்ற பின், 'பெங்களூரு பிராண்ட்' திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தார். நகர் வலம் வந்து என்ன பிரச்னைகள் உள்ளன என்பதை ஆய்வு செய்தார். இவற்றை சரி செய்து, பெங்களூரை முன்னுதாரண நகராக மேம்படுத்துவதாக அறிவித்தார்.

ஆயினும் அவரது அறிவிப்பு, அறிவிப்பாகவே நின்று விட்டது. கடந்த பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் செலவில், 'துாய்மை பெங்களூரு' திட்டம், 1,000 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவுகள் மறு சுழற்சி மையங்கள் அமைப்பது, துப்புரவு தொழிலாளர்களுக்கு, 'சரணர் சத்யக்கா' விருது வழங்குவது...

கெம்பே கவுடா விருது வழங்குவது, 100 கோடி ரூபாய் செலவில், 'ஆரோக்கிய பெங்களூரு', பெங்களூருக்கு தனி சுகாதார அமைச்சகம், 'ஆரோக்கிய சாரதி', 'டெக் பெங்களூரு', புதிதாக 50 இந்திரா உணவகங்கள் அமைப்பது என, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இவற்றில் எந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 'இந்த திட்டங்கள் என்னவாகின' என, மக்கள் எரிச்சலுடன் கேள்வி எழுப்புகின்றனர். வாக்குறுதி திட்டங்களுக்கு மட்டுமே, அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

வளர்ச்சி திட்டங்களை பற்றி சிந்திக்கவில்லை. குறைந்தபட்சம் சாலை பள்ளங்களுக்கு கூட தீர்வு காணவில்லை என, பொருமுகின்றனர்.

இது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:

பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சரான, துணை முதல்வர் சிவகுமார், கண்ட, கண்டவர்களின் நட்டு, போல்டை டைட் செய்வதிலேயே பிசியாக இருக்கிறார். அவரது, 'பிராண்ட் பெங்களூரு' புஸ்வாணமாகி விட்டது. கடவுளே வந்தாலும் பெங்களூரை மேம்படுத்த முடியாது என, சிவகுமார் மவுனமாக அமர்ந்துள்ளார்.

கடந்தாண்டு பட்ஜெட்டில் பெங்களூருக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அறிவிப்புடன் நின்றுவிட்டன. இந்த திட்டங்கள் என்ன ஆகின என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிவகுமாருக்கு பணியாற்ற ஆர்வம் இருந்தால் அல்லது அவருக்கு நேரம் இருந்தால் மட்டும், பெங்களூரு நகர வளர்ச்சி துறையை வைத்து கொள்ளட்டும். இல்லையென்றால் இத்துறையை திறமையான வேறு அமைச்சரிடம் ஒப்படைத்து, புண்ணியம் கட்டி கொள்ளுங்கள்.

கடந்த 20 மாதங்களில், பெங்களூரின் வளர்ச்சிக்கு, சிவகுமாரின் பங்களிப்பு என்ன. இவரது சாதனை என்ன. பணியாற்றி விட்டு பேச வேண்டும். பேசுவது மட்டுமே வேலையாக இருக்க கூடாது.

கார்டன் சிட்டி பெங்களூரை, ஊழல் காங்கிரஸ் அரசு, டஸ்ட் சிட்டியாக மாற்றியுள்ளது. இதையே பிராண்ட் பெங்களூரு என கூறி கொள்கிறது.

நகரின் எந்த பகுதிக்கு சென்றாலும், சாலை பள்ளங்கள் தென்படுகின்றன. வாகன பயணியரின் உயிரை எடுக்க காத்திருக்கின்றன. குவியும் குப்பைகளால், மக்கள் மூக்கை மூடிக்கொண்டு நடமாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, பெங்களூரு நகரில் வசிக்கும் மக்களும், கடந்த ஆண்டு அறிவித்த பல திட்டங்கள், கோப்புகளில் துாங்குவதாக அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us