/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரதமரிடம் சிவகுமார் சொன்னது என்ன?
/
பிரதமரிடம் சிவகுமார் சொன்னது என்ன?
ADDED : ஆக 11, 2025 04:49 AM
l மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க, சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து ராகிகுட்டாவுக்கு, பிரதமர் மோடி காரில் சென்றார். சவுத் எண்ட் சதுக்கம் பகுதியில் கார் சென்ற போது, மோடியை பார்க்கும் ஆர்வத்தில் வாலிபர் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்ட முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்
l பிரதமர் மோடியை பார்க்க, சிவாஜிநகரை சேர்ந்த முகமது கோஸ் என்ற முஸ்லிம் முதியவர், சாளுக்கியா சதுக்கத்தில் காத்து இருந்தார். 'மோடி மிகவும் நல்ல மனிதர். அவரால் தான் நாடு முன்னேறி உள்ளது' என புகழாரம் சூட்டினார்
l ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்து இறங்கியதும் அவரை எதிர்க்கட்சி தலைவர் அசோக் வரவேற்றார். ஆனால் அசோக்கை பார்த்து சிரிக்காமல், மோடி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார். திரும்பி செல்லும் போது மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி வழியனுப்ப வந்தார். அவரிடம் சிரித்து பேசியபடி மோடி சென்றார்
l புதிய மெட்ரோ பணி துவக்க விழாவில், சித்தராமையா பேசி கொண்டு இருக்கும் போது, திடீரென மோடியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்த, துணை முதல்வர் சிவகுமார், பிரதமர் மோடியிடம் இரண்டு நிமிடம் ஏதோ ரகசியமாக பேசினார்
l அரசியல் எதிரியான சிவகுமாரும், மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமியும் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர். பக்கத்து இருக்கையிலும் அமர்ந்து இருந்தனர். ஆனாலும் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டனர். மோடியுடன், சிவகுமார் பேசி கொண்டு இருந்த போது, குமாரசாமி, சோமண்ணாவுடன் பேசினார்.