/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராகுலுடன் பேசியது என்ன? பதில் தர சிவகுமார் மறுப்பு
/
ராகுலுடன் பேசியது என்ன? பதில் தர சிவகுமார் மறுப்பு
ராகுலுடன் பேசியது என்ன? பதில் தர சிவகுமார் மறுப்பு
ராகுலுடன் பேசியது என்ன? பதில் தர சிவகுமார் மறுப்பு
ADDED : ஜன 17, 2026 07:17 AM

''முதல்வர் பதவி விவகாரம், எனக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும், கட்சி மேலிடத்துக்கும் இடையேயான விஷயம். பொதுவெளியில் விவாதிக்கும் விஷயமல்ல,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
டில்லியில் நேற்று பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:
அசாம் சட்டசபை தேர்தல் தொடர்பாக, கட்சி தலைவர்களுடன் பேச வந்துள்ளேன். என்ன பேசினோம் என்பதை எப்படி விவரிக்க முடியும். கட்சி அளவில் இது குறித்து விவாதிக்கப்பட்டதே தவிர, பொது வெளியில் பேசுவதற்கு அல்ல. அப்படி ஏதாவது தெரிவிக்க வேண்டும் என்றால், எங்கள் கட்சியின் பொதுச்செயலர் அறிவிப்பார்.
நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக விவாதிக்க, மத்திய அமைச்சர்களுடன் பேச வேண்டி உள்ளது. எனவே, சட்ட வல்லுனர்களுடன், மத்திய அமைச்சரை கண்டிப்பா க சந்திப்பேன்.
மைசூருக்கு ராகுல் வந்திருந்த போது என்ன பேசினோம் என்பதை எப்படி விவரிக்க முடியும். இது, எங்கள் இருவருக்கும் இடையேயான பேச்சு. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

