ADDED : ஜன 17, 2026 07:17 AM
ஆன்மிகம் சொற்பொழிவு ஸ்ரீராமர் குறித்து சுவாமி பரமஹம்சானந்தாஜி ஆங்கிலத்தில சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கர்நாடக மாநில அண்ணா தொழிற் சங்கப்பேரவை சார்பில் நடக்கிறது. அன்னதானம், இனிப்பு வழங்கல், இலவச சேலைகள் வழங்கல்-நேரம்: காலை 10:00. இடம்: காந்தி சதுக்கம், ராபர்ட்சன் பேட்டை.
மோஹே கடை திறப்பு திருமண மணமக்கள் ஆடை கடை திறப்பு - மாலை 4:00 மணி. இடம்: மோஹே பிரைட் டிரைப், 8, 29வது குறுக்கு, இரண்டாவது பிரதான சாலை, நான்காவது பிளாக், ஜெயநகர், பெங்களூரு.
மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் குடியரசு தினத்தை ஒட்டி, 219 வது மலர் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: கண்ணாடி மாளிகை, லால்பாக் பூங்கா, பெங்களூரு.
அவரைக்காய் மேளா அவரைக்காயை பயன்படுத்தி செய்யும் உணவுகள் தொடர்பான மேளா - காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை. இடம்: 242, 17 வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
கைத்தறி கண்காட்சி தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகம் சார்பில் கைத்தறி மற்றும் பட்டு சேலை கண்காட்சி, விற்பனை - காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.
கதை சொல்லுதல் கோபாலசுவாமி பி.யு. கல்லுாரி கன்னட பேராசிரியை சுமாவின் 'கதை கேட்கலாம் வாங்க - 915' - மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. இடம்: சுருச்சி ரங்கமனே, குவெம்பு நகர், மைசூரு.
கலாசார நிகழ்ச்சி மைசூரு பாரதிய வித்யா பவன் சார்பில் ஹரி - சேத்தனா குழுவினரின் கதக் - மாலை 6:00 மணி. இடம்: பாரதிய வித்யா பவன் ஒய்.டி.தத்தாச்சாரி அரங்கம், முதல் ஸ்டேஜ், விஜயநகர், மைசூரு.
இசை நிகழ்ச்சி ஸ்ரீதியாகராஜ சங்கீத சபா நல அறக்கட்டளை சார்பில் ரூபாஸ்ரீயின் பாடல், அமோகா நாடதுாரின் வயலின், விக்ரம் பரத்வாஜின் மிருதங்கம், அஜயின் கடம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், எஸ்.பி.எம்., காலனி, ஸ்ரீராமபுரம், மைசூரு.
தசரா கண்காட்சி கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு.
நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை ஓபன் மைக் - இரவு 7:01 முதல் 8:30 மணி வரை. இடம்: ஹட்டல் காபி கோ, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட்.
கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பங்கி சாலை, மல்லேஸ்வரம்.
ஜாமிங் நைட் - இரவு 10:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜெட் பேக்கர், 1085, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
இபிசா சிட்டி - மாலை 4:00 முதல் நள்ளிரவு 12:00 மணிவரை. இடம்: லகோ பால்ம்ஸ் ரிசார்ட், 212, ஜிகனி, பெட்டதாசனபுரா.
ஒன் நைட் இன் பப்ளிக் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பப்ளிக் பெல்லந்துார், 57, 1'ஏ' வெளிவட்ட சாலை, தேவரபீசனஹள்ளி, பெல்லந்துார்.
காமெடி காமெடி ஷோ - மாலை 5:00 முதல் இரவு 10:15 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், பிரிகேட் சாலை, அசோக் நகர்.
டெல்லிங் லைஸ் - மாலை 5:00 முதல் இரவு 8:45 மணி வரை. இடம்: மதர் டெக்லா அரங்கம், 143, ஜெனரல் கே.எஸ்.திம்மையா சாலை, அசோக் நகர்.
ஜோக்ஸ் அட் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், இரண்டாவது தள ம், பிரிகேட் கார்டன்ஸ், 205, சர்ச் தெரு, அசோக் நகர்.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

